உங்களுடைய தமிழ் எப்படி? இந்தத் தேர்வை எடுத்துப் பாருங்களேன்.
Multiple answer questions to test proficiency in Tamil grammar
(2nd year level)


Choose the correct word to fill in the blank.

I. Appropriate use of Modal forms.


1. உங்களால் நாளைக்கு எங்கள் வீட்டுக்கு ________________

a)வர வேண்டுமா?
b)வரலாமா?
c)வரமுடியுமா?
d)வர வேண்டாமா?


2. நீங்கள் இன்றைக்குக் கட்டாயம் தமிழ் வீட்டுப் பாடத்தை -----------
a) எழுத முடியும்
b) எழுதலாம்
c) எழுத முடியாது
d) எழுதவேண்டும்


3. இன்றைக்கு ஒருவேளை மழை -----------
a) பெய்ய முடியும்
b) பெய்யலாம்
c) பெய்ய வேண்டும்
d) பெய்ய வேண்டாம்


4. எனக்குக் கால் வலிக்கிறது. என்னால் வேகமாக-----------
a) நடக்கலாம்
b) நடக்கவேண்டாம்
c) நடக்க முடியாது
d) நடக்கக் கூடாது


5. நான் ரொம்பக் குண்டாக இருக்கிறேன். அதனால் நான் ரொம்ப ----------- என்று மருத்துவர் சொல்லியிருக்கிறார்.
a) சாப்பிடலாம்
b)சாப்பிடக்கூடாது
c) சாப்பிட வேண்டும்
d) சாப்பிடமுடியும்


II. Appropriate use of Aspectual forms:



6. நாங்கள் காலையிலிருந்து தமிழ் -----------
a) படித்து விட்டோம்
b) படித்திருக்கிறோம்
c) படித்துக்கொள்கிறோம்
d) படித்துக்கொண்டிருக்கிறோம்


7. நாங்கள் இந்தியாவுக்குப் போய் நிறைய தடவை தாஜ்மஹாலை -----------
a) பார்த்துக்கொண்டிருக்கிறோம்
b) பார்த்திருக்கிறோம்
c) பார்த்துக்கொள்ளவில்லை
d) பார்த்துக்கொள்கிறோம்


8. நீங்கள் இதுவரையிலும் திருப்பதி லட்டு -----------
a) சாபிட்டுவிட்டீர்களா?
b) சாப்பிட்டதில்லையா?
c) சாப்பிட்டுக்கொண்டிருக்கிறீர்களா?
d) சாப்பிட்டுவிட்டீர்கள்


9. தமிழ் நாட்டில் கோயிலுக்குள் செருப்பு ----------- போகக் கூடாது.
a) போட்டுவிட்டு
b) போட்டுக்கொண்டு
c) போடாமல்
d) போட்டுவிடாமல்


10. எனக்குப் பாட்டு ----------- கார் ஓட்டப் பிடிக்கும்.
a) பாடிக்கொண்டே
b) பாடிவிட்டு
c) பாடி
d) பாடிக்கொள்ளாமல்


11. நேற்று நான் வேகமாக ஓடிக்கொண்டிருந்த போது திடீரென்று கீழே -----------
a)விழுந்துகொண்டிருந்தேன்
b)விழுந்திருக்கிறேன்
c) விழுந்துகொண்டேன்
d) விழுந்துவிட்டேன்¨


12. நாளைக்குக் கல்யாணத்துக்குப் போகும் போது பெண்ணுக்கு ஒரு பரிசை ----------- போவேன்
a) வாங்கிவிட்டு
b) வாங்கிக்கொண்டு
c) வாங்கியிருந்து
d) வாங்கிக்கொண்டிருந்து


III. Appropriate use of Adjectival participle forms

13. தெருவில் திடீரென்று ----------- பையனைப் பார்த்தேன்
a)விழுந்திருக்கிற
b)விழுந்துவிட்ட
c) விழாத
d) விழுந்துகொள்ளாத


14. நான் எனக்கு ----------- தமிழ்ப் புத்தகமும் நீங்கள் உங்களுக்கு ----------------- ஆங்கிலப் புத்தகமும் நல்ல புத்தகங்கள்.
a) வாங்கிக்கொண்டிருக்காத
b) வாங்கியா
c) வாங்கிக்கொண்ட
d) வாங்கிவிட்ட


15. சென்னைக்கு ----------- ரயிலில் நான் சிதம்பரத்துக்குப் போகப் போகிறேன்.
a) போய்விட்ட
b) போகும்
c) போய்க்கொண்ட
d) போய்விடும்


16. நான் நேற்று பள்ளிக்கூடத்துக்கு ----------- உங்களுக்குத் தெரியுமா?
a) வந்துவிட்டது
b) வராதது
c) வந்துகொண்டிருப்பது
d) வந்துவிடுவது
பதினாறுக்குப் பதினாறு வாங்கியிருந்தால் அடுத்த கட்டத்துக்குப் போங்கள். இல்லையேல் தமிழ் 101 படித்துவிட்டு வாருங்கள்

மீண்டும் யூனிகோட் பக்கத்துக்கு